ADDED : டிச 07, 2024 06:49 AM
திருப்பூர்; 'திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட முந்தைய அட்டவணைப்படி அரையாண்டு தேர்வு நடத்தப்படும்,' என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரையாண்டுத்தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை.
முந்தைய அட்டவணைப்படி, தேர்வுகள் நடைபெறும். பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நாளை மறுதினம் (வரும், 9ம் தேதி) துவங்குகிறது. 12ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.
23ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்புக்கு, வரும், 10ம் தேதி, தமிழ், 12ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணக்கு, 19ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு, 10ம் தேதி முதல், 23ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளுக்கு, 16ம் தேதி முதல், 23ம் தேதிக்குள் தேர்வு நடைபெறும். தேர்வுகள் முடிந்து, 24ம் தேதி முதல், ஜன., 1ம் தேதி வரை ஒன்பது நாள் விடுமுறை அளிக்கப்பட்டு, 2025, ஜன., 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.