/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விபத்து' வாகனங்கள் நேரடி ஆய்வு இல்லை
/
'விபத்து' வாகனங்கள் நேரடி ஆய்வு இல்லை
ADDED : ஏப் 19, 2025 11:32 PM

பல்லடம்: வாகன விபத்துகளின் போது விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் குறித்த ஆர்.டி.ஓ., ஆய்வு என்பது நடைமுறையில் உள்ளது.
விபத்துக்கான காரணம், விபத்தில் ஈடுபட்ட வாகனத்தின் நிலை, பழுதுபார்க்கும் செலவுக்கான மதிப்பீடு மற்றும் விபத்து தொடர்பான விசாரணை ஆகியவற்றுக்கு ஆர்.டி.ஓ., ஆய்வு அவசியம்.
விபத்துக்கு பின், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் மூலம் ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விபத்துக்குள்ளான வாகனம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆனால், பல்லடத்தில், வாகனங்களை ஆய்வு செய்ய ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர் யாரும் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சமூக ஆர்வலர் அண்ணா துரை கூறுகையில், ''பல்லடம் பகுதியில் விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆய்வு செய்வதில்லை. மாறாக, இங்கிருந்து 'மீட்பு' வாகனங்கள் வாயிலாக, வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால், வாகன உரிமையாளருக்கு தேவையற்ற செலவு, அலைச்சல் ஏற்படுகிறது.
குறைந்தபட்சம், வாரம் ஒருமுறையாவது, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர்கள் பல்லடத்துக்கு நேரடியாக வந்து வாகனங்களை ஆய்வு செய்தால், வாகன ஓட்டிகளின் சுமை குறையும்,'' என்றார்.

