sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வேண்டவே வேண்டாம் புதிய புறவழிச்சாலை திட்டம்'

/

'வேண்டவே வேண்டாம் புதிய புறவழிச்சாலை திட்டம்'

'வேண்டவே வேண்டாம் புதிய புறவழிச்சாலை திட்டம்'

'வேண்டவே வேண்டாம் புதிய புறவழிச்சாலை திட்டம்'


ADDED : ஆக 14, 2025 09:42 PM

Google News

ADDED : ஆக 14, 2025 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, புதிய புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

இதனால், ஏராளமான விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி, பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, நகராட்சி கமிஷனரை சந்தித்து முறையிட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது: புதிய புறவழிச்சாலை வருவதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், திட்டம் மாற்றப்பட்ட விவரம் எங்களுக்கு பின்னரே தெரியவந்தது. நகரப் பகுதியில் நெரிசலை தவிர்க்கவே புறவழிச்சாலை.

நகரை ஒட்டியே வருவது எப்படி புறவழிச்சாலையாகும். மேலும், நான்கு வழிச்சாலையே போதும் என்றுள்ள நிலையில், எதற்காக ஆறு வழிச்சாலைக்கு நிலம் எடுக்கின்றனர் என்று தெரியவில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று தொழில் செய்து வருகிறோம். ஏற்கனவே, எண்ணெய் குழாய் பதிப்பு பணிக்காக பாதி நிலத்தை இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.

புதிய புறவழிச்சாலை திட்டத்தால் நிலங்கள் பறிபோகும் என பெண்கள் கதறுகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே இதனை நிறுத்தி விட்டால், பாதிப்பிலிருந்து நாங்கள் மீள்வதுடன், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். புதிய புறவழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்தி, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் அருள், ''இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை சந்திக்க வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us