/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட கிழக்கு பருவ மழை; ஆரம்பமே அமர்க்களம்: குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்
/
வட கிழக்கு பருவ மழை; ஆரம்பமே அமர்க்களம்: குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்
வட கிழக்கு பருவ மழை; ஆரம்பமே அமர்க்களம்: குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்
வட கிழக்கு பருவ மழை; ஆரம்பமே அமர்க்களம்: குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்
ADDED : அக் 08, 2024 12:24 AM

உடுமலை : உடுமலை பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால், குளிர் சீதோஷ்ண நிலை துவங்கியுள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, வாழை, நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என, 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு, 618.20 ஆகும். உடுமலை பகுதிகளில், நடபாண்டு இயல்பான மழை பெய்து வருகிறது.
ஆண்டு சராசரி மழை பொழிவில், ஜன., - பிப்., மாத குளிர் கால மழையளவு சராசரி, 14 மி.மீ., ஆக உள்ள நிலையில், நடப்பாண்டு, ஜன., மட்டும், 34.4 மி.மீ.,மழை பெய்தது. மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை சராசரியளவு, 135.10 மி.மீ., ஆகும்.
நடப்பாண்டு, மார்ச், ஏப்., மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. மே மாதம் மட்டும், 7 மழை நாட்களில், 134 மி.மீ, மழை பெய்தது.
அடுத்து, ஜூன் முதல் செப்., வரையிலான தென்மேற்கு பருவ மழை, சராசரியளவு, 154.80 ஆகும். இதில், உடுமலை பகுதியில், 170.30 மி.மீ., மழை பெய்தது.
ஆனால், கடந்த, செப்., மாதத்தில் மழை பெய்யாமல், கடும் வறட்சியும், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்பட்டது.
இந்நிலையில், அக்., முதல் டிச., வரையிலான, வட கிழக்கு பருவ மழை, ஆரம்பமே அமர்க்களாக துவங்கியுள்ளது.
உடுமலை பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை இயல்பாக பெய்த நிலையில், கடந்த ஒரு மாதமாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை காலம் துவங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், மீண்டும் குளிர் சீதோஷ்ண நிலை துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 10 மி.மீ., மழையும், அமராவதி அணை பகுதியில் - 2, திருமூர்த்தி அணை - 5, மடத்துக்குளம் - 3, வரதராஜபுரம் - 10, பெதப்பம்பட்டி - 3, பூலாங்கிணர், - 13.20, நல்லாறு - 6, உப்பாறு அணை - 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
நேற்றும், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பருவ மழை பரவலாக பெய்து வந்தது.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டு மழை பொழிவில் வட கிழக்கு பருவ மழை பங்களிப்பு அதிகமாக இருக்கும்; இக்காலத்தில், சராசரியாக, 314.30 மி.மீ., மழை பொழிவு உள்ளது. நடப்பாண்டு துவக்கத்திலேயே, மடத்துக்குளம் பகுதிகளில், 40 மி.மீ., வரை மழை கிடைத்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. நடப்பாண்டு, இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், இறவை மற்றும் மானாவாரி நிலங்களிலும் விவசாயிகள் சாகுபடியை துவக்கியுள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.