/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகார் தெரிவிக்க அறிவிப்பு: ஊராட்சி நிர்வாகம் தீவிரம்
/
புகார் தெரிவிக்க அறிவிப்பு: ஊராட்சி நிர்வாகம் தீவிரம்
புகார் தெரிவிக்க அறிவிப்பு: ஊராட்சி நிர்வாகம் தீவிரம்
புகார் தெரிவிக்க அறிவிப்பு: ஊராட்சி நிர்வாகம் தீவிரம்
ADDED : ஜன 14, 2025 09:19 PM

உடுமலை:
அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க, போடிபட்டி ஊராட்சி நிர்வாகத்தில் 'வாட்ஸ அப்' எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ளதால், சிறப்பு அலுவலர்களின் கீழ் நிர்வாகம் நடக்கிறது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் அடிப்படை சுகாதாரம், குடிநீர் தட்டுபாடு, தெருவிளக்கு, ரோடு சீரமைப்பு உட்பட அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கும், புகார் அளிப்பதற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 'வாட்ஸ் அப்' எண்கள் வழங்கி இருந்தனர்.
ஒரே ஊராட்சியில் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளுக்கென 'வாட்ஸ் அப்' குழு அமைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் புகார்களும் தெரிவித்தனர்.
தற்போது கிராம ஊராட்சிகளில் செயலாளர்கள், சிறப்பு அலுவலர்கள் நிர்வாக பொறுப்பில் உள்ளனர். அலுவலர்களை பொதுமக்கள் நேரடியாக அணுகும் வகையிலும், புகார்களை தெரிவிப்பதற்கும், போடிபட்டி ஊராட்சியில் 'வாட்ஸ் அப்' எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
போடிபட்டி ஊராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு உட்பட பல்வேறு பிரச்னைகளை ஊராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிப்பதற்கு, 'வாட்ஸ் அப்' அல்லது தொலைபேசி வாயிலாக அழைக்க எண் வழங்கியுள்ளனர். பொதுமக்கள் அதை பயன்படுத்தவும் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.