/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பகைவரைச் சாய்த்து பாரதம் காத்தோரே!
/
பகைவரைச் சாய்த்து பாரதம் காத்தோரே!
ADDED : டிச 08, 2024 02:50 AM

திருப்பூர்: முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், டிச., 7ம் தேதி படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அளவிலான, படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
கலெக்டர் பேசியதாவது:
படைவீரர் கொடிநாளில் திரட்டப்படும் நிதி, போரில் ஊனமுற்ற படைவீரர்கள், போரில் உயிர்நீத்த படைவீரர்களின் குடும்ப நலனுக்காக செலவிடப்படுகிறது. இறந்த படைவீரர்களின் குடும்பத்துக்காக பல்வேறு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 2022ம் ஆண்டில், கொடிநாள் நிதியாக, ஒரு கோடியே, 19 லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த 2023ல், ஒரு கோடியே, 27 லட்சத்து, 16 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அரசுப்பணியாளர்களும், தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும், முன்னாள் படைவீரர் நலனுக்காக, கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) வெங்கட்ராமன், துணை தலைவர் (முப்படை வீரர் வாரியம்) கர்னல் ராமகிருஷ்ணன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.