/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலிதீன் மீதான தடை : அதிகாரிகள் தயக்கம்
/
பாலிதீன் மீதான தடை : அதிகாரிகள் தயக்கம்
ADDED : அக் 16, 2025 11:34 PM

பல்லடம்: பண்டிகை என்றாலே, புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. இதில், தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளும் பட்டியலில் சேர்ந்துள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டும் பெயரளவுக்கே இது பின்பற்றப்படுகிறது.
பொதுமக்கள் மாற வேண்டும் என, வியாபாரிகளும்; வியாபாரிகள் வழங்குவதால் தான் வாங்குகிறோம் என பொதுமக்களும் மாறி மாறி குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதிகப்படியான பாலிதீன் பைகள் புழக்கத்துக்கு வந்து விட்டன.
விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறுகையில், 'பாலிதீன் தடையை செயல்படுத்த அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர். தடை உத்தரவை முறையாக பின்பற்றினால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதுடன், துணி பைகளின் விற்பனை அதிகரித்து, காடா துணி உற்பத்தி தொழில் வளம் பெற்று, எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ் வாதாரம் மேம்படும்' என்றார்.