/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டவுன் ஹால் வளாகத்தில் 'பார்க்கிங்'
/
டவுன் ஹால் வளாகத்தில் 'பார்க்கிங்'
ADDED : அக் 16, 2025 11:35 PM
திருப்பூர்: திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள மாநாட்டு மைய வளாகத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை, கட்டணங்கள் செலுத்தி நிறுத்தி கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கடை வீதிகளுக்கு செல்ல வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மக்களின் நலன் கருதி, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குமரன் ரோட்டில் உள்ள மாநாட்டு மைய(டவுன்ஹால்) வளாகத்தில் தனியாக கட்டப்பட்டுள்ள தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில், தற்காலிக அடிப்படையில் நிறுத்தி செல்ல அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் இன்று முதல் 20ம் தேதி வரை காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை தங்களது வாகனங்களை நிறுத்தி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் படி தொகை செலுத்தலாம். இரவு, 9:00 மணிக்கு மேல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. நிறுத்திய வாகனங்களை, திருப்பி எடுக்க, இரவு, 10:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
டூவீலர் ஒன்றுக்கு, 20 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 50 ரூபாய் (ஆறு மணி நேரம் வரை) மற்றும் ஆறு மணி நேரத்துக்கு மேல், ஒவ்வொரு, ஆறு மணி நேரத்துக்கும் வாகனங்களுக்கு தகுந்த மாதிரி கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.