/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓங்கி ஒலித்த 'ஓம் சக்தி... பராசக்தி' : கொண்டத்துக்காளியம்மன் குண்டம் திருவிழாவில்... பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி பரவசம்

ADDED : ஏப் 09, 2025 07:09 AM

அனுப்பர்பாளையம் : கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், 'ஓம் சக்தி... பராசக்தி' கோஷம் முழங்க, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். -
திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்த பெற்ற பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக குதிரையுடன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள படைக்கல சாவடிக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பரிவார மூர்த்திகளான கன்னிமார் - கருப்பராயன், முனீஸ்வரனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதன்பின், அதிகாலை 5:00 மணிக்கு கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கோவில் தலைமை பூசாரிகள் மனோகரன் விநாயகமூர்த்தி, ஆகியோர் கைக்குண்டம் வாரி இறைத்து குண்டம் இறங்கி துவக்கி வைத்தனர். பூசாரிகளை தொடர்ந்து, வீரமக்கள் மஞ்சள் உடை உடுத்தி மஞ்சள் நீர் கிணற்றில் குளித்து, பக்தி பரவசத்துடன், 'ஓம் சக்தி... பராசக்தி' என்ற கோஷம் முழங்க, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, காலை, 11:00 மணி வரை நடைபெற்றது. முன்னதாக, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், அறநிலையத்துறையினர், போலீசார் குண்டம் இறங்கியது குறிபிடத்தக்கது. தொடர்ந்து, குண்டம் மூடப்பட்டது. குண்டத்தின் மீது பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்பு, மிளகு செலுத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.