/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலை புறப்பட்ட ஆம்னி பஸ் விபத்து: பெங்களூரு பக்தர்கள் 23 பேர் காயம்

ADDED : நவ 17, 2025 02:04 AM

அவிநாசி: பெங்களூரில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட ஆம்னி பஸ் அவிநாசி அருகே விபத்துக்குள்ளானதில், பஸ் டிரைவர் மற்றும் 23 பக்தர்கள் காயமடைந்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து, 37 பக்தர்களுடன் கேரளாவின் சபரிமலைக்கு, தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது; நேற்று அதிகாலை 5:00 மணியளவில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த நியூ திரு ப்பூர் அருகே சேலம் - கொச்சி பைபாஸ் சாலையில் வந்துகொண்டிருந்தது; கர்நாடகாவின் தும்கூரிலிருந்து கோவைக்கு மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு, முன்னே சென்ற 16 சக்கர லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் அப்பளமானது. பஸ் டிரைவர் சேகர், 26 மற்றும் 23 பக்தர்கள் காயமடைந்தனர்.
பஸ் டிரைவரின் துாக்க கலக்கத்தால், விபத்து நிகழ்ந்ததாக பெருமாநல்லுார் போலீசார் கூறினர். பலத்த காயமடைந்த சேகர், பக்தர்கள் கமலாத்தாள், 67, சங்கீதா, 57, குருசாமியான ஆனந்த கவுடா, 34 ஆகியோர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெங்களூரில் சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.