ADDED : ஜூலை 27, 2025 11:37 PM
பொங்கலுார்; இந்த ஆண்டு வைகாசி பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்ளூரிலும் இதன் தேவை அதிகம் இருப்பதால் தற்பொழுது வியாபாரிகள் குறைந்தபட்சம், 40 ரூபாய் முதல் அதிகபட்சம், 50 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர்.
வரும் தீபாவளி பண்டிகையின் போது இதன் தேவை மேலும் அதிகரிக்கும். அப்போது அறுவடை முடிந்துவிடும். இதனால் சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்பு உள்ளது. பண தேவை உள்ள விவசாயிகள் உடனுக்குடன் விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் இருப்பு வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். எனவே, நல்ல லாபத்தை எதிர்பார்த்து ஓரளவு தாக்குப் பிடிக்கக் கூடிய வெங்காயத்தை இருப்பு வைக்கவும் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின் றனர்.