sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாராபுரத்தில் 'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு; அமைச்சர் வீட்டை முற்றுகையிட முடிவு

/

தாராபுரத்தில் 'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு; அமைச்சர் வீட்டை முற்றுகையிட முடிவு

தாராபுரத்தில் 'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு; அமைச்சர் வீட்டை முற்றுகையிட முடிவு

தாராபுரத்தில் 'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு; அமைச்சர் வீட்டை முற்றுகையிட முடிவு


ADDED : செப் 27, 2025 01:28 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தாராபுரம் அருகே, கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் வீட்டை முற்று கையிட போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம், விவசாய நிலங்களையும் குடிநீர் ஆதாரங்களையும் பாதிக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கொளத்துப்பாளையம் சுற்றுப்பகுதியில் உள்ள செல்லாண்டி, புங்கந்துறை, குறிஞ்சிவ லசு உள்ளிட்ட கிராமங்களில் ஊர்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அதில், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் நுாற்றுக்கணக்கானோர் திரண்டு வரும், 28ம் தேதி, தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

போராட்ட குழுவினர் கூறியதாவது: கொளத்துப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு நுாற்பாலை செயல்பட்ட இடத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அமராவதி பாசன நிலங் களில் விவசாயம் நல்ல முறையில் உள்ளது. தொழிற்பேட்டை அமைந்தால், நீர் மாசுபடும்; விவசாயம் பாதிக்கப்படும். மண் வளமும் கெடும். எங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பறிபோகும் அபாயம் உள்ளது.

பழைய கூட்டுறவு நுாற்பாலையின் 70 ஏக்கர் நிலம் இத்திட்டத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இங்கு காலணி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பேட்டரிகள், சோலார் பேனல்கள் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைந்தால், சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கும் இது குறித்து ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us