/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓ.டி.பி., வரவில்லை சம்பளம் கிடைக்கவில்லை! ஊராட்சி பணியாளர்கள் புலம்பல்
/
ஓ.டி.பி., வரவில்லை சம்பளம் கிடைக்கவில்லை! ஊராட்சி பணியாளர்கள் புலம்பல்
ஓ.டி.பி., வரவில்லை சம்பளம் கிடைக்கவில்லை! ஊராட்சி பணியாளர்கள் புலம்பல்
ஓ.டி.பி., வரவில்லை சம்பளம் கிடைக்கவில்லை! ஊராட்சி பணியாளர்கள் புலம்பல்
ADDED : செப் 18, 2025 11:25 PM
பல்லடம்; ஓ.டி.பி., பிரச்னை காரணமாக, பல்லடம் ஒன்றிய ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவையில் உள்ளது.
பல்லடம் ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் வேலை பார்க்கும் துாய்மை காவலர்கள், துப்புறவு பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்கள், டிராக்டர் மற்றும் வாகன ஓட்டுநர்கள் என, ஒவ்வொரு ஊராட்சிகளிலும், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, பணியாளர்களுக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது.
இது குறித்து ஊராட்சி பணியாளர்கள் கூறியதாவது: குறைந்த சம்பளத்துக்கு தான் நாங்கள் வேலை பார்த்து வருகிறோம். அதனையும் வழங்காமல் கிடப்பில் வைத்தால், எவ்வாறு குடும்பம் நடத்துவது என்றே தெரியவில்லை. கடந்த ஜூலை மாத சம்பளம் ஆக., மாதம் வாங்கினோம். அதன்பின், 47 நாட்கள் ஆகியும், ஆக., மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டால், இரண்டு நாளில், வந்துவிடும் என, தொடர்ந்து ஒரே பதிலை கூறி வருகின்றனர். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், சம்பளத்தை இவ்வாறு நிலுவையில் வைத்தால், குடும்ப செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும்.
உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ஊராட்சி செயலர் ஒருவர் கூறுகையில், 'பி.டி.ஓ., மற்றும் மண்டல பி.டி.ஓ., ஆகியோருக்கு ஓ.டி.பி., வருவதில் சிக்கல் உள்ளது. ஓ.டி.பி., எண் வந்தால்தான் ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்கள் உட்பட, அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்.
நிலுவை சம்பளம் கேட்டு பணியாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருவதால், என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. ஓரிரு நாட்களி ல் தீர்வு ஏற்படும் என, பி.டி.ஓ., உறுதி கூறியு ள்ளார்,' என்றார்.