/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக பாரம்: லாரிகளுக்கு அபராதம்
/
அதிக பாரம்: லாரிகளுக்கு அபராதம்
ADDED : நவ 15, 2024 11:31 PM
உடுமலை; விதிகளை மீறி, கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற நான்கு டிப்பர் லாரிகளுக்கு, 2.65 லட்சம் ரூபாய் அபராதம், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளால் விதிக்கப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இருந்து, கேரளாவுக்கு அதிகளவில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், குடிமங்கலம் வழியாக, கருங்கற்கள் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச்சென்ற லாரிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து, உடுமலை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குடிமங்கலம் சென்று, விசாரணை நடத்தினர். உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்ட குழுவினர் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். இதில், நான்கு டிப்பர் லாரிகளுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.
விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி சென்றது; முறையான ஆவணங்களை வைத்திருக்காதது, தார்ப்பாயால் மூடாமல் பொருட்களை ஏற்றி செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக நான்கு லாரிகளுக்கு, 2.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.