/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனிசாமி 12ம் தேதி வருகை; மக்களை திரட்ட ஆலோசனை
/
பழனிசாமி 12ம் தேதி வருகை; மக்களை திரட்ட ஆலோசனை
ADDED : செப் 07, 2025 10:46 PM

திருப்பூர்; அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
வரும் 11ம் தேதி காங்கயத்தில் பேசுகிறார். அன்று இரவு திருப்பூரில் தங்கும் அவர், 12ம் தேதி காலை, தொழில்துறையினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்று மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் வடக்கு தொகுதியில், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதி; திருப்பூர் தெற்கு தொகுதியில், மாநகராட்சி அருகேயும், மக்களை சந்தித்து பேசுகிறார். தொகுதி வாரியான ஏற்பாடுகள் குறித்து, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் உள்ள, 'பூத்' வாரியான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.
ஒவ்வொரு பூத்தில் இருந்தும், தலா, 200 நபர்களை அழைத்துவர திட்டமிட வேண்டும்; குறிப்பாக, பெண்கள் அதிகம் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கான வாகன வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.