/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் குறுமைய போட்டி; மெரிட் மெட்ரிக் பள்ளி அசத்தல்
/
பல்லடம் குறுமைய போட்டி; மெரிட் மெட்ரிக் பள்ளி அசத்தல்
பல்லடம் குறுமைய போட்டி; மெரிட் மெட்ரிக் பள்ளி அசத்தல்
பல்லடம் குறுமைய போட்டி; மெரிட் மெட்ரிக் பள்ளி அசத்தல்
ADDED : செப் 16, 2025 11:35 PM

திருப்பூர்; பல்லடம் குறுமைய விளையாட்டு போட்டிகள், பொங்கலுார் ராஜா நேஷனல் மெட்ரிக் பள்ளி நடைபெற்றது.
இதில், மெரிட் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று பல போட்டிகளில் அசத்தினர். 14 வயது பிரிவில், கையுந்து பந்து போட்டியில் முதலிடம், 14 வயது பிரிவு எறிபந்தில் இரண்டாமிடம், 17 வயது பிரிவில் இரண்டாமிடம், 17 வயது பிரிவு இறகுபந்தில், இரண்டாமிடம், 14 வயது பீச் வாலிபால் பிரிவில், இரண்டாமிடம் பிடித்தனர்.
மாணவியரில், 14 வயது பிரிவில் எறிபந்தில் முதலிடம், 17 வயது பிரிவில் எறிபந்தில் முதலிடம், 14 வயது பிரிவில் சதுரங்க போட்டியில் முதலிடம், 14 வயது இறகுபந்து பிரிவில், இரண்டாமிடம் பிடித்தனர். முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர் அனைவரும் மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் பெரியசாமி, தாளாளர் கவுதம், பள்ளி முதல்வர் ஆனந்தி ஆகியோர் பாராட்டினர்.