/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி போட்டி பல்லடம் அணி வெற்றி
/
மாநில கபடி போட்டி பல்லடம் அணி வெற்றி
ADDED : செப் 27, 2024 11:43 PM

பல்லடம்: பி.ஜி., கபடி விளையாட்டு கழகம், பல்லடம் தமிழ் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு தொடர் கபடி போட்டி, பல்லடம் மணிவேல் மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது.
இரண்டு நாட்களாக நடந்த தொடர் போட்டியில், கோவை, திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி, நாமக்கல், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80 அணிகள் பங்கேற்றன.
மொத்தம் நான்கு சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில், பல்லடம் கபடி கழகம், 24:17 என்ற புள்ளிக் கணக்கில், நாமக்கல் குமாரபாளையம் கபடி அணியை வீழ்த்தி வெற்றி கோப்பையை கைப்பற்றியது. குமாரபாளையம் அணி இரண்டாம் இடம் பெற்றது. டாஸ் முறையில் பி.ஜே., பிரதர்ஸ் அணி மூன்றாம் இடமும், ஓம் முருகா கேட்டரிங் அணி நான்காம் இடமும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு, தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார்.
தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகள் கோப்பைகள் வழங்கினார். பல்லடம் நண்பர்கள் கால்பந்து குழு செயலாளர் திருமூர்த்தி விழாவை ஒருங்கிணைத்தார்.