நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயம் ஒன்றியம், கீரனுார் ஊராட்சியில், வட்டார தோட்டக்கலை துறை பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.
ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஷ்குமார் தலைமை வகித்தனர். தோட்டக்கலை அலுவலர் நிவேதகுமார் முன்னிலை வகித்தார். வட்டாரத்தில் 1,925 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 500 பனை விதைகளை நடவு செய்யும் பணியைத் துவங்கினர். வரும் நாட்களில் மீதமுள்ளவை நடவு செய்யப்படும்.