ADDED : மார் 26, 2025 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தல் அடிப்படையில், சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது, காவல் உதவி செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. குழந்தைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. ஆசிரியர் கண்ணபிரான் நன்றி தெரிவித்தார்.