UPDATED : அக் 22, 2026 05:46 PM
ADDED : அக் 22, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை அருகே முக்கோணம் பகுதியில், விபத்துகளை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை– பொள்ளாச்சி ரோட்டில் முக்கோணம் அமைந்துள்ளது. பொள்ளாச்சி, உடுமலை ரோடு, ஆனைமலை ரோடு ஆகிய மூன்று ரோடுகள் சந்திக்கும் இப்பகுதியில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
நெடுஞ்சாலையில் ஆனைமலையிலிருந்து வரும் வாகனங்கள் சந்திக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
