/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுனர் உரிமம் பெற வரிசை கட்டும் மக்கள்; அடிப்படை வசதி இல்லாததால் அவதி

ADDED : மே 13, 2025 11:40 PM
திருப்பூர் : திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற தினசரி ஏராளமான மக்கள் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், வாகனங்களை ஓட்டிக் காண்பிக்க செய்து, அதன் பிறகு, பழகுனர் உரிமம் வழங்கப்படும்.
வாகனத்தை ஓட்டி காண்பிக்கப்படும் இடத்திற்கு தினமும் ஏராளமான ஆண்களும், பெண்களும் வருகின்றனர். ஆனால், அந்த இடத்தில் கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடையாது; வாகன பழகுநர் மற்றும் ஓட்டுன் உரிமம் வாங்க, தினசரி ஏராளமான மக்கள் திரளும் நிலையில் மணிக்கணக்கில் காத்திருந்து, தங்கள் பணியை அவர்கள் முடித்து செல்கின்றனர்.
புதிய வாகனம் வாங்குவது, வரி செலுத்துவது போன்றவற்றின் வாயிலாக, பெரும் தொகை அரசுக்கு வரி வருவாயாக மக்கள் செலுத்தும் நிலையில், 'தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேணடும்' என்பதே, அவர்களின் எதிர்பார்ப்பு.