/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2026 05:51 AM
உடுமலை: மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையி னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த பாலத்தில் தடுப்பு சுவர் சேதமடைந்தும், விரிசல் ஏற்பட்டும், செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தில் சேதத்தை உடனடியாக சரிசெய்து, சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

