/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழி ரோடு பரிதவிக்கும் மக்கள்
/
பல்லாங்குழி ரோடு பரிதவிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 14, 2025 12:38 AM

திருப்பூர்; திருப்பூர் - பெருமாநல்லுார் ரோட்டில், சிறுபூலுவப்பட்டி துவங்கி பாண்டியன் நகர், அண்ணா நகர் வரை மூன்று கி.மீ., துாரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டோரத்தில் கேபிள் பதிக்கவும், பாதாள சாக்கடைக்கு நடுரோட்டை தோண்டியும் பணி மேற்கொண்டனர். மீண்டும் ரோடு போடும் போது, முறையாக நீள, அகலம், சாலை உயரம் அளவீடு செய்து ரோடு போடாமல் ரோடு போட்டுள்ளனர்.
இதனால், தார்ரோடு இருந்தும் சாலை பொத்தல் சாலையாக உள்ளது. கனரக வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, டூவீலரில் வருவோரின் தடுமாறுகின்றனர். இடது புறம் ஒதுங்கி செல்ல முயன்றால், சாலையில் குவிந்துள்ள மணலில் சறுக்கி விழுந்து விடும் நிலை உள்ளது.
திருப்பூர் தெற்கு பகுதி மட்டுமின்றி, பெருமாநல்லுார், குன்னத்துார், நம்பியூர், செங்கப்பள்ளி வட்டாரங்களில் இருந்து தினசரி, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இச்சாலை வழியாக நகருக்குள் வந்து, பணியாற்றி விட்டு வீடு திரும்புகின்றனர். சாலை இவ்வாறு உள்ளதால், இரவில் வாகன ம்ஓட்டவே பயப்படுகின்றனர்.
---
திருப்பூர், பி.என்., ரோடு, பூலுவப்பட்டி - பாண்டியன் நகர் இடையே சேதமாகியுள்ளது.