ADDED : ஏப் 10, 2025 11:42 PM
திருப்பூர்; நாச்சிபாளையத்தில் வீட்டில் வளர்த்து வந்த நாய் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நாச்சிபாளையம், கிறிஸ்டியன் வீதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். தனது வீட்டில் கடந்த சில ஆண்டு களாக 'சச்சின்' என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
கடந்த நான்கு நாட் களாக அந்த நாயை காணவில்லை. நேற்று அருகேயுள்ள ஒரு காலியிடத்தில் கம்பி வேலியில் தலையில் அடிபட்ட நிலையில் நாய் இறந்து கிடந்தது.
விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நாயை அடித்துக் கொன்று சாக்குமூட்டையில் கொண்டு சென்ற தகவல் கிடைத்தது. அதிர்ச்சி யடைந்த இஸ்ரவேல் இதுகுறித்து பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்புக்கு தகவல் அளித்தார்.
அதன் தலைவர் நளினி அளித்த ஆலோசனையின் பேரில், அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

