ADDED : நவ 02, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (பி.எப்.,) திருப்பூர் மண்டலம் சார்பில், 74வது நிறுவன நாள் விழா, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரியில் இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கிறது.
இதில் அமைச்சர்கள் அருண்ராஜ், கமலி மற்றும் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் பி.எப்., சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது. விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
தொழில் அமைப்பினர், திட்டப் பயனாளிகள் திரளாகப் பங்கேற்குமாறு பி.எப்., திருப்பூர் மண்டலம் அழைப்பு விடுத்துள்ளது.
