/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு சரி செய்யும் பணி; அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு
/
குழாய் உடைப்பு சரி செய்யும் பணி; அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு
குழாய் உடைப்பு சரி செய்யும் பணி; அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு
குழாய் உடைப்பு சரி செய்யும் பணி; அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு
ADDED : செப் 20, 2025 08:05 AM

திருப்பூர்; மொரட்டுப்பாளையம் ஊராட்சியில், குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நடந்தது. இதை நெடுஞ்சாலைத் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்குளி அருகேயுள்ள மொரட்டுப்பாளையம் ஊராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக குடிநீர் குழாய்கள் ஊத்துக்குளி ரோடு பகுதியில் ரோட்டோரம் பதிக்கப்பட்டுள்ளது. இதில் மொரட்டுப்பாளையம் பகுதியிலிருந்து சேடபாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
அதில், மொரட்டுப்பாளையம் ஊராட்சி அலுவலகத்துக்கு அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 20 நாட்களாக இந்த இடத்தில் குடிநீர் வெளியேறி ரோட்டில் தேங்கி, பெரும் அவதியை ஏற்படுத்தியது.
இது குறித்த புகாரின் பேரில் நேற்று குடிநீர் பணியாளர்கள் இந்த உடைப்பை சரி செய்யும் பணியைத் துவங்கினர். இதற்காக ரோட்டோரம் குழி தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த ஊத்துக்குளி பிரிவைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறையினர், ரோட்டில் உரிய அனுமதி பெறாமல் குழி தோண்டக் கூடாது என்று கூறி, குடிநீர் பணியாளர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து ஊராட்சி நிர்வகம் சார்பில், நெடுஞ்சாலைத் துறையினருடன் பேச்சு நடந்தது. குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால், அவசர அவசியம் கருதி, அதனை சரி செய்யும் பணி வழக்கமாக நடப்பது தான் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ரோட்டோரத்தில் குழி தோண்டும் போது, உரிய பிரிவில் தகவல் அளித்து அனுமதி பெற்ற பின்பே பணி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்து பொருட்கள் திருப்பி அளிக்கப்பட்டது.