/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; இன்று பணிகள் துவக்கம்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; இன்று பணிகள் துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; இன்று பணிகள் துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; இன்று பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 03:24 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு மையங்களில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்குகிறது. வரும், 17 ம் தேதி வரை இப்பணி நடக்கிறது.
மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டத்தில், 94 மையங்களில், 25 ஆயிரத்து, 348 மாணவர்கள், 179 தனித்தேர்வர்கள் தேர்வை எதிர்கொண்டனர்; 25 ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவுற்றது. ஒவ்வொரு தேர்வுகள் முடிந்ததும், முதன்மை கண்காணிப்பாளர்கள், விடைத்தாள்களை போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு பள்ளியிலும் இன்று காலை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 17ம் தேதியுடன் முடிவடைகிறது. மே, 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் கூறியதாவது:
தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விடைக் குறிப்பு தயாரிப்பு, முகாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முன்னதாக முடிக்கப்பட்டு விட்டது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் அளிப்பது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து கூர்ந்தாய்வாளர், முதன்மை தேர்வர் உள்ளிட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுதும் இரண்டு மையங்களில் நடைபெற உள்ள விடைத்தாள் திருத்தும் பணியில், 510க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு, முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் கூறினார்.