ADDED : ஜூலை 26, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:பாட்டாளி
மக்கள் கட்சியின், 38வது ஆண்டு விழாவை ஒட்டி, தாராபுரத்தை அடுத்த
ஆச்சியூர் பிரிவு அருகே, கட்சி கொடியேற்று விழா நடந்தது.
இதை தொடர்ந்து
நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு, நகர தலைவர் பிரவீன்குமார் தலைமை
தாங்கினார். மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல்,
நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
