/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் மீது 'போக்சோ'
/
சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் மீது 'போக்சோ'
ADDED : மே 23, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : பெருமாநல்லுார், படையப்பா நகரை சேர்ந்தவர் சர்தார் சேட், 64.
இவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து சிறுமியை மீட்டனர். பெருமாநல்லுார் போலீசார் அளித்த தகவலின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் சர்தார் சேட்டை 'போக்சோ'வின் கீழ் கைது செய்தனர். அதன்பின், ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சர்தார் சேட், மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைக்கப்பட்டார்.