மொபைல் போன் பறித்தவர் கைது
உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் சிராஜ் மிஸ்ரா, 29. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் தங்கி, பனியன் பிரின்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பிரிட்ஜ்வே காலனியில் ரோட்டில் மொபைல் போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, டூவீலரில் வாகனத்தில் வந்த மர்ம நபர், சிராஜ் மிஸ்ராவின் மொபைல் போனை பறித்து கொண்டு தப்பி சென்றார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த செல்வகுமார், 35 என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
நகை திருட்டு: டிரைவர் கைது
திருப்பூர், அணைக்காட்டை சேர்ந்தவர் ரிவேதா, 32. கடந்த சில நாட்களுக்கு முன், வாடகை வாகனம் மூலம் திருநெல்வேலியில் நடக்கும் திறப்பு விழாவுக்காக சென்றார். அப்போது ரிவேதாவிடம் இருந்த, எட்டு சவரன் நகை மாயமாகி இருந்தது. வீட்டுக்கு வந்து பார்த்த போது நகையில்லை. புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். கார் டிரைவர், விஜய கண்ணன், 37 என்பவர் திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.

