/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயம் சப் டிவிசனில் அயல்பணிகளில் பணிபுரியும் காவலர்கள் உரிய காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டும்; டி.எஸ்.பி., உத்தரவு

ADDED : நவ 21, 2024 05:46 PM

காங்கேயம்:காங்கேயம் சப் டிவிசனில் உள்ள காவல் நிலையங்களில் அயல்பணியாக பணிபுரியும் காவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல்நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என டி.எஸ்.பி., மாயவன் உத்தரவிட்டுள்ளார்.
காங்கேயம் சப் டிவிசனில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி ஆகிய நான்கு சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு மகளிர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் நிலையமும் உள்ளது. இதில் ஆறு இன்ஸ்பெக்டர்கள், 22 சப் இன்ஸ்பெக்டர்கள், என 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த காவல் நிலையங்களில் அயல் பணி என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட போலீசார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பணி இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தனி ராஜாங்கமே நடத்தி வருவதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்ச்சியான புகார்கள் சென்றன.
இது குறித்து டி.எஸ்.பி., விசாரணையில் ஈடுபட்ட நிலையில், காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், போக்குவரத்து காவல் நிலையங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் அரசின் உத்தரவை மீறி ஒரே பணி இடங்களில் அயல் பணி என்ற பெயரில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் அயல் பணி போலீசார் அனைவரும் இன்றைக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல்நிலையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., மாயவன் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாமூல் போலீசார் ரெக்கமண்டேசனுக்காக அரசியல்வாதிகளை நாடி வருவதாக கூறப்படுகிறது.