/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு
/
தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு
தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு
தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு
ADDED : பிப் 14, 2024 11:55 PM
திருப்பூர் : லோக்சபா தேர்தலையொட்டி போலீசார் இடமாற்றம் விஷயத்தில் மாவட்டத்தில் பெரும்பாலான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநகரில் மட்டும் இதற்கான பணி மந்த கதியில் நடக்கிறது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வருவாய்த்துறை, போலீசார் உள்ளிட்ட அனைத்துறைகளிலும் இடமாற்றம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட புதிய எஸ்.பி., பொறுப்பேற்றவுடன், 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றுபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அடுத்தடுத்து சில நாள் இடைவெளியில், போலீசார், தனிப்பிரிவு போலீசார் என, 181 பேரை எஸ்.பி., அபிஷேக் குப்தா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தவிர இன்ஸ்பெக்டர்களும் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றத்தில் சென்றனர்.
மாநகர போலீசாரில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் என, 28 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். போலீசார் முதல் போலீஸ் ஏட்டு வரையிலான இடமாற்றம் இன்னும் செய்யப்படவில்லை. மூன்றாண்டுகளை கடந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று, மாநகர போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
சுட்டிகாட்டிய 'தினமலர்'
திருப்பூர் மாவட்டத்தில், தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்படாமல் ஆண்டுக்கணக்காக ஒரே ஸ்டேஷனில் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக பட்டியல் தயார் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், பணி ரீதியாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத சிலரை தவிர்த்து பெரும்பாலான எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

