/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மறுநாள் போலியோ சொட்டு; குட்டீஸூக்கு கொடுக்க தவறாதீங்க!
/
நாளை மறுநாள் போலியோ சொட்டு; குட்டீஸூக்கு கொடுக்க தவறாதீங்க!
நாளை மறுநாள் போலியோ சொட்டு; குட்டீஸூக்கு கொடுக்க தவறாதீங்க!
நாளை மறுநாள் போலியோ சொட்டு; குட்டீஸூக்கு கொடுக்க தவறாதீங்க!
ADDED : மார் 01, 2024 12:24 AM
திருப்பூர்:கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் 895 மையங்கள்; நகர்ப்புறங்களில் 259 மையங்கள் என, மொத்தம் 1,154 மையங்களில், வரும் 3ம் தேதி போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட், டோல்கேட் ஆகிய இடங்களிலும் சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது. பஸ் ஸ்டாண்டுகளில் சொட்டு மருந்து வழங்க 26 நடமாடும் குழுக்கள்; ரயில்வே ஸ்டேஷன்களில் வழங்க 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்படும்.
பல்வேறு துறை சார்ந்த 4,616 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.98 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும், வரும் 3ம் தேதி நடைபெறும் முகாமில், கூடுதல் தவணையாக சொட்டுமருந்து அளித்து, குழந்தைகளை போலியோவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

