sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தி.மு.க., 10 இடங்களில் கூட தேறாது பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

/

தி.மு.க., 10 இடங்களில் கூட தேறாது பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

தி.மு.க., 10 இடங்களில் கூட தேறாது பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

தி.மு.க., 10 இடங்களில் கூட தேறாது பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


ADDED : ஆக 14, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ;அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கலெக்டர் மனிஷ் நாரணவரே மற்றும் மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோரிடம், குப்பை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி நேற்று மனு அளித்தார்.

மனு அளித்தபின் ஜெயராமன் கூறியதாவது:

திருப்பூர் மாநகர பகுதிகளில் கடந்த 30 நாட்களாக குப்பை அள்ளப்படாததால், பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. வாழமுடியாத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

குப்பை பிரச்னை குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சத்திலேயே, முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வரவில்லை; பொள்ளாச்சி வழியாக உடுமலை சென்றுள்ளார். இது, தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

திருப்பூருக்கு மட்டும், 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆகியோர் செய்துதந்தனர்.

கடந்த 2011 தேர்தலில், எதிர்க்கட்சியாக கூட தி.மு.க., வரவில்லை. வரும் 2026 தேர்தலிலும் தி.மு.க., பரிதாப நிலையிலேயே உள்ளது; பத்து இடங்கள் வெற்றிபெற்றாலே மிகப்பெரிய விஷயம்தான்.

துாய்மை பணியாளர்களை சந்திக்காமல், சினிமா பார்க்க சென்றுள்ளார் முதல்வர். துாய்மை பணியாளர்களை புறக்கணித்ததற்கு, வரும்காலத்தில் மிகப்பெரிய தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us