/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் பொங்கல் விழா மாணவியர் கொண்டாட்டம்
/
கல்லுாரியில் பொங்கல் விழா மாணவியர் கொண்டாட்டம்
ADDED : ஜன 12, 2025 02:11 AM
திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வித்யாகணபதி கோவிலிலிருந்து முளைப்பாலிகை மற்றும் மாவிளக்கு எடுத்துக் கொண்டு மாணவியர் வந்தனர். தொடர்ந்து கல்லுாரி மைதானத்தில் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு வழிபாடு நடந்தது.
பொங்கல் விழாவையொட்டி மாடு விடுதல், கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பம் சுற்றுதல், உறி அடித்தல் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் லதா, கல்லுாரி முதல்வர் கதிரேசன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர், அலுவலக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.