/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் விழா கோலப்போட்டி; எஸ்.ஆர்., நகர் வீதிகள் 'கலகல'
/
பொங்கல் விழா கோலப்போட்டி; எஸ்.ஆர்., நகர் வீதிகள் 'கலகல'
பொங்கல் விழா கோலப்போட்டி; எஸ்.ஆர்., நகர் வீதிகள் 'கலகல'
பொங்கல் விழா கோலப்போட்டி; எஸ்.ஆர்., நகர் வீதிகள் 'கலகல'
ADDED : பிப் 16, 2025 02:36 AM

திருப்பூர்: திருப்பூர், எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர்நலச்சங்கம் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு, கோலப்போட்டி நடந்தது.
திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 8ம் ஆண்டு பொங்கல் விழா இன்று நடக்க உள்ளது.
முன்னதாக, நேற்று ரத்தினவிநாயகர் கோவில் பிரதான வீதியில், கோலப்போட்டி நடந்தது. மாலையில், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இன்று காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளும் நடக்க உள்ளன. ஐந்து முதல் 10 வயது, 10 முதல், 15 வயது, 15 முதல்,20 வயது, 20 முதல், 25 வயது மற்றும் பெண்கள், ஆண்கள் மற்றும் மூத்தோருக்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை முதல் நடக்க உள்ளன.
மாலை, 6:00 மணி முதல், கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

