ADDED : செப் 22, 2025 12:20 AM

திருப்பூர்; அகத்தியர் எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில், மகாளயபட்ச அமாவாசை வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.
கே.செட்டிபாளையம் அகத்தியர் கோவிலில், சர்வ சித்தி விநாயகர், அகத்தியர், பதஞ்சலி மகரிஷி, தன்வந்திரி பகவான், ஸ்ரீவித்யா பராபட்டாரிகா மகாசோடஷிக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, மகா ம்ருத்யுஞ்ஜய யாகமும், லட்சுமி குபேர வசிய யாகமும், புருஷ சூக்த ேஹாமமும், அதிசூட்சும பித்ரு கண மகா யாகமும் நடந்தது. உலக நன்மைக்காகவும், திருப்பூர் தொழில் வளம் சிறக்க வேண்டியும், பொது வழிபாடு நடந்தது.
தொடர்ந்து, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர், காலை, 10:30 மணி முதல், kதியம் 2:30 வரை, அன்னதானம் வழங்கினர்.
பொதுமக்களுக்கு, கேசரியுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.