/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால்துறை சர்வர் 'மக்கர்' பொதுமக்கள் கடும் அவதி
/
தபால்துறை சர்வர் 'மக்கர்' பொதுமக்கள் கடும் அவதி
ADDED : நவ 06, 2025 04:39 AM

திருப்பூர்: பார்சல், பதிவு தபால் முன்பதிவுக்கான சர்வர் அடிக்கடி கிடைக்காததால், தபால் தேவையை நாடி வருவோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தபால் மற்றும் பார்சல் பதிவு துல்லியத்தன்மையாக இருப்பதுடன், குறைவான நேரத்தில் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால்துறை வேகம் காட்டு வதால், தினசரி தபால் முன்பதிவு, பதிவு தபால், பார்சல் உள்ளிட்ட சேவைகளுக்கு நுாற்றுக்கு மேற்பட்டோர், தபால் அலுவலகம் வருகின்றனர்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், கவுன்டர் முன்புறம், 'சர்வர் டவுன்' என எழுதிபோடப்பட்டுள்ளது. தபால் இணையதளம் வேகமாக இல்லாததால், புக்கிங் வருவோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தபால் துறை அலுவலகத்தின் ஒரு பகுதியாக இயங்கி வரும் ஆர்.எம்.எஸ். (ரயில் மெயில் சர்வீஸ்) அலுவலகத்திலும் பார்சல் புக்கிங் சேவை தாமதமாவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பூர், தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், ''தபால் துறை சர்வர் அட்டேட் செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.

