UPDATED : நவ 16, 2026 09:22 PM
ADDED : நவ 16, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும், 19ம் தேதி காலை, 10.00 மணிக்கு, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள், பயிற்சியில் பங்கேற்று, நாட்டுக் கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு, 0421 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மையத்தின் தலைவர் டாக்டர். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
