/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
/
விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:09 PM
அவிநாசி; கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், இன்று நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம், தெக்கலுார் கிளை விசைத்தறி சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடந்தது. இதில், சோமனுார், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லுார், கண்ணம்பாளையம் கிளை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால், 23ம் தேதி (இன்று) நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக தீர்மானிக் கப்பட்டது.
இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ஒப்பந்த கூலி வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களின் விவரங்களை சேகரித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நல ஆணையரிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இது குறித்து, திருப்பூர் போலீஸ் எஸ்.பி.,யிடம் கோரிக்கை மனு அளிப்பது எனவும், அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பது எனவும், தீர்மானிக்கப்பட்டது.