UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை (22ம் தேதி) குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிஷனர் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு 2 மற்றும் 4-வது குடிநீர் திட்டங்களின் கீழ் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இதனால் குடிநீர் ஏற்றும் பணி பாதிக்கப்படும். எனவே, நாளை (நவ. 22) திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படாது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
