/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பகுதியில் 5 மணி நேரம் மின் தடை
/
கோவில்வழி பகுதியில் 5 மணி நேரம் மின் தடை
ADDED : ஜூன் 15, 2025 11:10 PM
திருப்பூர்; திருப்பூர், கோவில்வழி பகுதியில், நேற்று பகல் நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் என, அனைவரும் வீட்டில் இருந்தனர்.
காலை, 11:00 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. இடையே சில நிமிடம் மின் சப்ளை செய்யப்பட்டது; மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இப்படியே, மாலை, 4:15 மணி வரை, மின்சாரம் தொடர்ந்து தடைபட்டது. மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பலத்த காற்று வீசியதால், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பலமான காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், மின்கம்பங்கள் சில இடங்களில் சாய்ந்தன. சில இடங்களில், மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பி மீது விழுந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக, காலை, 7:00 மணிக்கு தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் பாதிப்பை உணர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் குழு, நேற்று பகல் முழுவதும் மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக, மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.