/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு கோலாகலம்!
/
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு கோலாகலம்!
ADDED : ஜூலை 22, 2025 11:05 PM

திருப்பூர்; பிரதோஷம் முன்னிட்டு திருப்பூரில் உள்ள சிவாலயங்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமானை வழிபட்டனர்.
ஆடி மாத தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
சிவன் கோவில்களில் மூலவர் எதிரேயுள்ள, நந்திகேஸ்வரருக்கு முன்னதாக பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதன் பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.
திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில், பிரதோஷம் முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் உமாமகேஸ்வரர் உற்சவர் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பூர் அருகே எஸ்.பெரியபாளையத்தில் எழுந்தருளி உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், மகா நந்திக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
நல்லுார் - விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி - லிங்கேஸ்வரர் கோவில், பழங்கரை - பொன் சோழீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருப்பூர், லட்சுமி நகர் - அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி - காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் - சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை, கைலாசநாதர் கோவில், பூச்சக்காடு, சொக்கநாதர் சன்னதி, உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த கோவில்களில், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. இச்சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.