/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமிக்கு புகழாரம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமிக்கு புகழாரம்
ADDED : ஏப் 28, 2025 06:15 AM

திருப்பூர் : முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமியின் தொடர் மக்கள் சேவைக்கான பாராட்டு விழா, திருப்பூர், பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., செல்வராஜ் வரவேற்றார்.
துரைசாமி எம்.எல்.ஏ.,வாக இருந்த காலத்தில், திருப்பூரின் வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கிய, தனலட்சுமி மில்ஸ், வி.கே., குப்புசாமி செட்டியார், ஜித்துபாய் கோவிந்த் ஜி, ரத்தினசாமி, டி.டி.பி., மில், எல்.ஆர்.ஜி., நாயுடு, பழனிசாமி செட்டியார், கோவிந்தராஜ் செட்டியார், முருகன் செட்டியார், ராமநாதன் குடும்பத்தினர் மற்றும் அரிமா, ரோட்டரி சங்கத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
துரைசாமி சாதனை விளக்க மலரை, 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் வெளியிட்டார்; ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பெற்றுக் கொண்டார்.
அங்கேரிபாளையம் வி.கே., அரசுப்பள்ளியில் அகில் நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள துரைசாமி கலையரங்கத்தை, காணொலி காட்சி வாயிலாக, அமைச்சர் சாமிநாதன் திறந்துவைத்தார்.
மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், துரைசாமிக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.
எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயகுமார், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் அப்புக்குட்டி, 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, டாக்டர் முருகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துரைசாமி,ஏற்புரையாற்றினார்.
'அரசியல், தொழிற்சங்கம்
இரண்டிலும் வெற்றிகரம்'
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு பேசுகையில், 'சுதந்திர போராட்ட காலத்தில் அரசியலும், தொழிற்சங்கமும் இரு துருவங்களாக இருந்தன. தொழிற் சங்க தலைவராகவும் இருந்துகொண்டு, அரசியலிலும் வெற்றிகரமாக மக்கள் பணி ஆற்றியவர் துரைசாமி' என்றார்.

