/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் வேலை முகாம் வரும் 31ல் நடக்கிறது
/
தனியார் வேலை முகாம் வரும் 31ல் நடக்கிறது
ADDED : ஜன 28, 2025 05:18 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும், 31ம் தேதி நடக்கிறது.
காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் (அறை எண். 20) நடக்க இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலை தேடுநர்களை தேர்வு செய்ய உள்ளன. வேலையளிக்கும் நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்பட உள்ள வேலை தேடுநர்களுக்கு, முதல் நாளன்று பணி ஆணை வழங்கப்படும். பணிக்கான குறைந்தபட்ச சம்பளம், 15 ஆயிரம் ரூபாய். இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்று, பயன் பெறலாம்.
முகாமில் பங்கேற்கும் வேலை நாடுபவர்கள், தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் பயோ டேட்டாவுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9599055944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

