/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 17, 2025 08:50 PM
உடுமலை; திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19ம் தேதி) காலை, 10.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண்.439) நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்யவுள்ளானர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்கள், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.