/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரச்னைகள் ஓய்வதில்லை! குறைகேட்பு முகாமில் மனுக்களுக்கு பஞ்சமில்லை
/
பிரச்னைகள் ஓய்வதில்லை! குறைகேட்பு முகாமில் மனுக்களுக்கு பஞ்சமில்லை
பிரச்னைகள் ஓய்வதில்லை! குறைகேட்பு முகாமில் மனுக்களுக்கு பஞ்சமில்லை
பிரச்னைகள் ஓய்வதில்லை! குறைகேட்பு முகாமில் மனுக்களுக்கு பஞ்சமில்லை
ADDED : அக் 01, 2024 12:14 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ந்தபாடில்லை. ஒவ்வொரு வாரம் குறைகேட்பு கூட்டத்திலும், மனுக்கள் குவிகின்றன. நேற்றைய குறைகேட்பு கூட்டத்திலும், மக்களிடமிருந்து 500 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மக்கள் சேவகன்அறக்கட்டளை
அவிநாசி ஒன்றியம், போத்தம்பாளையம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள 13 கிராம பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு ஏ.டி.எம்., மையம் இல்லை. பணம் எடுக்க சேவூர் செல்ல வேண்டும்.
எனவே, போத்தம்பாளையத்தில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும். மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் நதியா:
அவிநாசி பேரூராட்சி, சோலை நகர் அடுக்குமாடி குடியிருப்பில், 380 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கன்வாடி மையம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
குடியிருப்பு வளாகத்திலேயே கட்டட இட வசதி உள்ளது. காலி இடங்களும் அதிகம் உள்ளன. அப்பகுதியில், புதிய அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு வளாகத்தில் பயன்பாடின்றி பூட்டி வைத்துள்ள ரேஷன் கடையை, திறந்து செயல்படுத்த வேண்டும்.
காதுகேளாதோர், வாய்பேசாதோர் உரிமைகளுக்கான கிளை மாநில குழு உறுப்பினர் கமலக்கண்ணன்:
காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும். அரசு பணியில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்கவேண்டும்.
இலவச வீட்டு மனை பட்டா உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக அளித்துள்ளோம். நியாயமான எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.