/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.12.38 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்
/
ரூ.12.38 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்
ADDED : மார் 12, 2024 04:19 AM
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி பகுதிகளில், 15வது நிதிக்குழு மானிய திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 77.60 லட்சம் மதிப்பீட்டிலும், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாபார்டு திட்டத்தில், 11.61 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நேற்று தொடங்கி வைத்தார்.
பிறகு காங்கேயம் நகராட்சி வாரச்சந்தையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டாங்காட்டு வலசில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில், பால் கொள்முதல் மைய கட்டடத்தை திறந்து வைத்து, விவாசயிகளுக்கு மரக்கன்று வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், காங்கேயம் நபராட்சி தலைவர் சூரியபிரகாஷ், நகர செயலாளர் சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

