தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/‘புரோஸெட் டெக்னாலஜிஸ்’ கம்ப்ரஸர் தயாரிப்பில் முத்திரை

‘புரோஸெட் டெக்னாலஜிஸ்’ கம்ப்ரஸர் தயாரிப்பில் முத்திரை

‘புரோஸெட் டெக்னாலஜிஸ்’ கம்ப்ரஸர் தயாரிப்பில் முத்திரை


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கோவை, ஈரோடு, சென்னை, ஓசூரில் கிளைகளுடன் இயங்கி வருகிறது ‘புரோஸெட் டெக்னாலஜிஸ்’.

இந்நிறுவனத்தினர் கூறியதாவது: தரமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து ‘புரோஸெட்’ பிராண்ட்டில் கம்ப்ரஸர்கள் தயாரிக்கிறோம். 5 எச்.பி. முதல் 1,000 எச்.பி. வரை ஸ்க்ரூ கம்ப்ரஸர்கள், லேசர் கட்டிங் தேவைக்காக 13 பாரில் இருந்து 16 பார் வரை அழுத்த வரம்பில் தயாரிக்கப்படுகிறது.

இன்வெர்ட்டர் முறையில் இயங்கும் ‘வேரியபிள் ப்ரீக்வென்சி டிரைவ்’ தொழிற்சாலை தேவைக்கேற்ப வேகத்தை கட்டுப்படுத்தி, மின்நுகர்வை 30 எச்.பி.யில் இருந்து 7.5 / 10 எச்.பி.யாக குறைத்து மின்கட்டணத்தை மிச்சப்படுத்துகிறது. இதற்கு பெர்மனென்ட் மேக்னட் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.

காற்றை சேமிக்க ஸ்டோரேஜ் டேங்க், ஈரப்பதம் நீக்க டிரையர் உள்ளது. இதனால் துருப்பிடிப்பது தடுக்கப்பட்டு ஆயுள் கூடுகிறது. டேங்க் மவுண்டட் வடிவிலும் கிடைக்கும். 10-க்கு 10 அடி அறைக்கு பதில் கம்ப்யூட்டர் இடத்தில் பிளக் அண்ட் பிளே முறையில் பொருத்தலாம்.

பராமரிப்பு செலவு 30 சதவீதம் வரை குறைவு. 24 மணி நேர சேவை, பழுதின்போது மாற்று கம்ப்ரஸர் வழங்கி தடையற்ற உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

தொடர்புக்கு: 90475 16999

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us