/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலி மது பாட்டில் சேகரிக்க எதிர்ப்பு
/
காலி மது பாட்டில் சேகரிக்க எதிர்ப்பு
ADDED : டிச 01, 2025 02:23 AM
திருப்பூர்: டாஸ்மாக் மதுக்கடைகளில், காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பணி, டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
நேற்றுமுன்தினம், திருப்பூர், 15 வேலம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, அமர்ஜோதி கார்டன் பகுதியில் உள்ள, டாஸ்மாக் கடை பாருக்கு சென்ற டெண்டர்தாரர், காலி பாட்டில்களை சேகரித்து செல்ல முற்பட்டுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார் உரிமையாளர்கள், ''நாங்கள் வாடகை செலுத்தி 'பார்' நடத்துகிறோம்.
பாட்டில்களை நீங்கள் சேகரித்து சென்றால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும்'' எனக்கூறி தடுத்துள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, 15 வேலம்பாளையம் போலீசார் தலையிட்டு, 'வரும் திங்கட்கிழமை, டாஸ்மாக் மண்டல மேலாளர் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு செல்லுங்கள்' எனக்கூறி, சமாதானம் செய்து வைத்தனர்.

